Skip to main content

அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மக்கள் இரையாக கூடாது - சீமான்

அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மக்கள் இரையாக கூடாது - சீமான்

கோவை மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்

பெட்ரோல்,மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:

நாடெங்கிலும் மதப்பூசல்கள் ஏற்பட்டபோதுகூட அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன.

ஒருபுறம், இஸ்லாமிய இயக்கங்களைக் குறிவைத்து, தேசியப் புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் விசாரணை, கைது என அதிகாரப்பலத்தின் மூலம் வேட்டையாடிக் கொண்டிருக்க, மறுபுறம், மாநிலம் முழுமைக்கும் 50 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தயாராகிக் கொண்டிருப்பது திட்டமிடப்பட்டச் சதியின் செயல்பாட்டு வடிவமேயாகும்.

திமுக அரசு, உயர் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை வைக்காது விட்டதன் விளைவாகவே, ஆர்.எஸ்.எஸ்-ஸின் பேரணிக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகியிருக்கும் நிலையில், மதவாதத்தை எதிர்ப்பதாகப் பேச்சளவில் மட்டும் கூறிக்கொண்டு, ஆட்சி நிர்வாகம், சட்டப்போராட்டமென செயல்பாட்டளவில் பாஜக-வோடு இணங்கிப்போகும் திமுக அரசின் பாதகச்செயல் பச்சைச் சந்தர்ப்பவாதமாகும்.

தென் மாநிலங்களே தங்களது இலக்கென பாஜக-வின் தலைவர் பெருமக்கள் கூறி வரும் நிலையில், அதற்கு அடித்தளமிடும் வகையில் தமிழகத்தில் மதமோதல்களையும், கும்பல் வன்முறைகளையும் ஏற்படுத்த இந்துத்துவ இயக்கங்கள் முயற்சிக்கிறதோ? எனும் ஐயம் வலுக்கிறது.

ஆங்காங்கே, ஆர்.எஸ்.எஸ்., பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாகனம் எரிக்கப்பட்டதாகவும் வருகிற செய்திகள் கடந்தகாலத்தையே நினைவூட்டுகின்றன.

தாங்களே தங்களது வீடுகளில் பெட்ரோல் குண்டை வீசி, தங்களது வாகனத்தை எரித்து அரசியல் லாபம் ஈட்ட முயன்ற பாஜக நிர்வாகிகளது முந்தையச் செயல்பாடுகள் யாவும் சமகாலச்சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு பெரும் மதக்கலவரத்தை தமிழகத்தில் ஏற்படுத்தத் திட்டமிட்டு வரும் இந்துத்துவக் கும்பலின் சதிச்செயல்களுக்கு இரையாகாது, தமிழக அரசு விழிப்போடு செயல்பட்டு சமூக அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டியது அரசின் தார்மீகப்பொறுப்பும், கடமையுமாகும்.

ஆகவே, இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புக்கவனம் செலுத்தி, மதப்பிளவுகளும், வன்முறைச்செயல்களும் நடைபெறாவண்ணம் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மதக்கலவரங்களை ஏற்படுத்தத் திட்டமிடும் மதவாதச்சக்திகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...