செய்யாறு: நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாள் விழா செய்யாறு நகர அதிமுக சார்பில் சிறப்பாக நடைபெற்றது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ அறிவுறுத்தலின் படி நகர கழக செயலாளர் கே வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவைத்தலைவர் ஜனார்த்தனம் முன்னிலை வகித்தார்
தொடர்ந்து ஆரணி கூட்டுச் சாலையில் அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
அங்கு குழுமியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது
உடன் அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment