முதல்வர் மு.க.ஸ்டாலினை முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்தித்தார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீன் தலைமையில், கேரளா மாநில தலைவர் சாதிக் அலி ஷிகாப் தங்கள், தேசிய பொதுச் செயலாளரும், கேரளா சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான பி.கே. குஞ்சாலிகுட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. பஷீர், அப்துல் வஹாப், அப்துல் சமது சமதாணி, கே. நவாஸ் கனி, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது எதிர்வரும் மார்ச் மாதம் 10 ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பவள விழா மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Comments
Post a Comment