வெம்பாக்கம்: ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய கழக செயலாளர் திருமூலன் (எ) பையாகுட்டி தலைமையில், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கோமதி ரகு மாவட்ட துணைச்செயலாளர் டி பி துரை முன்னிலையில், வெம்பாக்கம் தூசி மாமண்டூர் சிப்காட் ஆகிய இடங்களில் அதிமுக கொடியேற்றி அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் வேட்டி சேலை அன்னதானம் வழங்கப்பட்டது
இந் நிகழ்வில் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் உள்ளிட்ட
அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment