Skip to main content

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை: தகுதியானவர்கள் யார்?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை: தகுதியானவர்கள் யார்?

தமிழக பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள், யார் தகுதியானவர்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழக பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள், யார் தகுதியானவர்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்குவார்கள் என்று குடும்பத் தலைவிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதைப் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்தன.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

மேலும், இதற்காக பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு பெரிய அளவில் இருந்தாலும், முதலில் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்றால் எப்படி என்று எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

அதே நேரத்தில், அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துபவர்கள் வரிசையில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை தேவை இருக்காது என்று ஆளும் தி.மு.க தரப்பில் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கு தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றனர். இந்த குடும்ப அட்டைகள் மொத்த 4 வகையான குடும்ப அட்டைகள் இருக்கிறது. 1. AAY, 2. PHH, 3. NPHH, 4. NPHH-S என 4 வகையான குடும்ப அட்டைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் அந்தியோதயா அட்டைகள் வைத்திருப்பவர்கள் 18,64,201 குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

PHH அட்டை என்கிற முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கும் அரிசி வழங்கப்படுகிறது. அதே போல, NPHH என்கிற முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைகளுக்கும் அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி அட்டைகள் மட்டும் 1,98,24, 931 குடும்ப அட்டைகள் இருக்கிறது.

மேலும், NPHHS சர்க்கரை மட்டுமே வழங்கப்படுகிற அட்டைகள் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், கௌரவ அட்டைகள் இருக்கின்றன. இந்த குடும்ப அட்டையை அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில், AAY, PHH ஆகிய 2 வகை குடும்பஅட்டை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிய வருகிறது. 

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...