கோழிக்கோடு: லீக் ஹவுஸ் அரங்கில் கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம்
கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் மாநில தலைவர் செய்யிது சாதிக் அலி சிகாப் தலைமையில் நடைப்பெற்றது
தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய பொதுச் செயலாளரும், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான பி.கே.குஞ்ஞாலிக் குட்டி எம்.எல்.ஏ., தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கேரள மாநில பொதுச் செயலாளர் பி.எம்.ஏ.ஸலாம் வரவேற்புரையாற்றினார்.
இக் கூட்டத்தில் பவளவிழா அகில இந்திய மாநாட்டை சிறப்புடன் நடத்தியமைக்கு தமிழ்நாடு மாநில கிளைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் கே. நவாஸ் கனி எம்.பி. உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் புதிதாக கேரள மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்- செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Comments
Post a Comment