செய்யாறு நகர அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில், சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தனர்
இளைஞர்கள் இளம்பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் தங்களது பெயர்களை பதிவு செய்தனர்
அவைத்தலைவர் ஜனார்த்தனம் முன்னிலையில், நடைபெற்ற இந் நிகழ்வில் அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் பி ஜாகீர் உசேன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment