வெம்பாக்கம்: வெள்ளக்குளம் அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம் வெள்ளக்குளம் கிராமத்தில் ஒன்றிய கழக செயலாளர் திருமூலன்(எ) பையாகுட்டி தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை பூர்த்தி செய்தனர்
வெள்ளக்குளம் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் இளம்பெண்கள் ஆர்வத்துடன் தங்களது பெயர்களை பதிவு செய்தனர்
இந் நிகழ்வில், செய்யாறு ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன் அருகாவூர் அரங்கநாதன் அனக்காவூர் சி.துரை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு செய்யாறு கழக அவைத்தலைவர் ஜனார்த்தனம் நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் உள்ளிட்டோர்
பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் முன்னிலையில் தங்களை அதிமுக வில் இணைத்துக் கொண்டனர்இம் முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கோவிந்தராஜ் செய்திருந்தார்
Comments
Post a Comment