செய்யாறு: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு!
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் இருந்து வருகிறார்
தற்போது திருவண்ணாமலை மாவட்டம் கட்சி நிர்வாக வசதிக்காக நான்காக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
தொடர்ந்து வடக்கு மாவட்ட கழக செயலாளராக தூசி கே.மோகன் செய்யாறு வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார்
செய்யாறுக்கு வருகை தந்த வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகனுக்கு அதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்
நூற்றுக்கணக்கானோர்
ஊர்வலமாக சென்று ஆரணி கூட்டுச் சாலையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
உடன் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் விமலா மகேந்திரன் நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் அவைத்தலைவர் ஜனார்த்தனம் அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன் அருகாவூர் அரங்கநாதன் சி.துரை மு.எம்எல்ஏ குணசீலன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment