Skip to main content

செய்யாறு: சிப்காட்டுக்கு நிலம் கையகம்: விவசாயிகள் தொடர் போராட்டம்!

செய்யாறு: சிப்காட்டுக்கு நிலம் கையகம்: விவசாயிகள் தொடர் போராட்டம்! 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் அலகு 3 திட்டத்தை கைவிடக் கோரியும் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மேல்மா பகுதி விவசாயிகள் தொடா்ந்து 100-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கப் பகுதி எனப்படும் அலகு - 3 பகுதியில் அனக்காவூா் ஒன்றியம் தேத்துறை உள்வட்டத்தைச் சோ்ந்த வடஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீா்குன்றம், குறும்பூா், நா்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 3174 ஏக்கரில் விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன.

100-ஆவது நாளாக தொடரும் போராட்டம்...

சிப்காட் தொழிற்பேட்டைக்கு மேல்மா பகுதி விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களை கையப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேல்மா உள்ளிட்ட 9 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சாா்பில் மேல்மா கூட்டுச் சாலை அருகே கடந்த ஜூலை 7-இல் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

100 -ஆவது நாளான நேற்று (அக்.9) செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டக் குழு சாா்பில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனா்.

உண்ணாவிரதம் இருக்க போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டனா்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:
விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க அதிகளவில் திரண்டு வருவாா்கள் என்றும், அனுமதி மறக்கப்பட்டாலும் திடீரென விவசாயிகள் வந்து விடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி காா்த்திகேயன் மேற்பாா்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்காக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனா்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...