காஞ்சிபுரம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா
முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது
முன்னாள் எம்எல்ஏ க்கள் வாலாஜாபாத் கணேசன் மைதிலி திருநாவுக்கரசு முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இதைத்தொடர்ந்து அங்கு குழுமியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது உடன் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment