Skip to main content

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும் - இரா.முத்தரசன்

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும் - இரா.முத்தரசன்

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்,பாலஸ்தீன மக்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேல்-அமெரிக்காவின் போர் மற்றும் இனப் படுகொலையைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் பங்கேற்று பேசியதாவது:

"இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கடந்த 10 நாட்களாக கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர்கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டின் முதல் பிரதமரான நேரு காலம் தொடங்கி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து இந்தியா ஆதரவு நிலை எடுத்தது. ஆனால், இப்போது மத்தியில் உள்ள பாஜக அரசு இஸ்ரேலில் உள்ள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படுவது, இந்தியாவின் அணி சேரா கொள்கைக்கு நேர் எதிரான கொள்கையாகும். இதுவரை அத்தகைய கொள்கையை நாம் பின்பற்றியது கிடையாது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். இஸ்ரேலுக்கு கொடுக்கப்படும் ஆயுதங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேபோல், அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொடுத்து, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக ஒரு கொடிய குற்றச் செயலை செய்து கொண்டிருக்கிறது.

ஐ.நா. சபை போரை நிறுத்தும்படி இஸ்ரேலை பலமுறை வலியுறுத்தியும், இஸ்ரேல் ஐ.நா.சபையின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டு வருகிறது. அதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. அத்துடன், இந்தியாவும் சேர்ந்துஆதரவு அளிக்கிறது. போரைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா.சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாலஸ்தீனத்தை அங்கீகரித்து, அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். போர் 10 மாதங்களுக்குப் பிறகு தற்போது தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக, லெபனான் நாட்டுக்குச் சென்ற ஹமாஸ் தலைவர்கள் வான்வழி தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, போர் தீவிரமடைந்துள்ளது. உலகம் அமைதியாக இருந்தால்தான் எல்லா நாடுகளும்முன்னேறும். போரற்ற உலகத்தைஉலகம் காண வேண்டும். அதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் எம்.பி. கே.சுப்பராயன், மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், தேசியக் குழு உறுப்பினர் வஹிதா நிஜாம் உள்ளிட்டோர் பேசினர்.


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...