வந்தவாசி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வந்தவாசி தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய கழக செயலாளர் அர்ச்சுனன் ராஜேஷ் தலைமையில்நடைபெற்றது
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட பொருளாளரும்,ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவருமான ஆலத்தூர் எம்.சுப்பராயன் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேர்தல் பொறுப்பாளருமான வாலாஜாபாத் கணேசன் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வழக்கறிஞர் பி.ஜாகீர் உசேன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி பேசினர்
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் அனக்காவூர் சி.துரை வெம்பாக்கம் வயலூர் ராமநாதன் பெரணமல்லூர் ஜி.செல்வராஜ் டி.வி.பச்சையப்பன் எம்கேஏ லோகேஷ்வரன் தெள்ளார் தனசேகர் வெண்குன்றம் முனுசாமி மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராணி பெருமாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜேஷ் கண்ணா மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண் அனக்காவூர் ஒன்றிய அவைத்தலைவர் ஏ.வி சேகர் நகர கழக செயலாளர்கள் ஓட்டல் பாஷா பெரணமல்லூர் மூர்த்தி துணைச்செயலாளர் ஜவகர் (எ) அறிவழகன் வந்தவாசி
நகர இளைஞரணி செயலாளர் ராஜசேகர் முன்னாள் சேர்மன் வழூர் சக்கரபாணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment