"ரெட் கிராஸ் சேவை அளப்பரியது" ரெட் கிராஸ் நிறுவனர் படத்திறப்பு விழா நிகழ்வில் வட்டாட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ரெட் கிராஸ் சங்க கிளை சார்பில் ரெட் கிராஸ் சங்க நிறுவனர் ஹென்றி டுனான்ட் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படம் திறப்பு விழா மற்றும் 'சேவையே தூய்மை' என்ற தலைப்பில் உரையரங்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் சங்க துணை தலைவர் ஆர். சரவணன் தலைமை தாங்கினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி முதல்வர்
ஆ. தீனதயாளன் முன்னிலை வகித்தார்.
ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி பங்கேற்று ரெட் கிராஸ் அரும்பணி களையும், சேவைகளை பற்றியும் விளக்கினார். மேலும் ஜூனியர் ரெட்கிராஸ் கையேடு தொகுப்புகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் உறுப்பினர் எ.தேவா, பள்ளி ஜெஆர்சி ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்திபன், வனஜா, முதுகலை ஆசிரியர் எம்.எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் ரெட் கிராஸ் சங்க பொருளாளர் அ. விஜயன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment