Skip to main content

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

அமெரிக்காவை மையமாகக் கொண்டுள்ள தற்சார்பு நிறுவனமான இந்தியா ஹேட் லேப்(ஐஎச்எல்) 'இந்திய வெறுப்பு ஆய்வகம்' மேற்கொண்ட ஆய்வில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு இந்தியாவில் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இத்தகைய வெறுப்புப் பேச்சானது, ஆளும் பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஹிந்து தேசியவாத இயக்கங்களின் கொள்கை, சித்தாந்தங்களுடன் பிண்ணிப் பிணைந்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் பரப்புரையின்போது, பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை ஏற்றுக்கொள்ளத்தகாத அளவுக்கு அதிகம் வெளிப்படுத்தியதாக விமர்சகர்களும் செயற்பாட்டாளர்களும் பிரதமர் நரேந்திர மோடி, அவர் சார்ந்துள்ள பாஜக மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஹிந்து பெரும்பான்மையின மக்களை பிரித்து வாக்கு சேகரிக்க இந்த யுக்தியை அவர்கள் கையாண்டிருப்பதாக விமர்சன்ம் முன்வைக்கப்படுகிறது.

பொதுத்தேர்தல் பரப்புரையின்போது மோடி முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால் தேசத்தின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு அக்கட்சி பகிர்ந்தளிக்கும் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பாஜகவின் ஹிந்து தேசியவாத பரப்புரையால், இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து பல மடங்கு கவலை கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

2023-ஆம் ஆண்டில், மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து வெளிப்படுத்தப்படும் வெறுப்புணர்வு கருத்துக்களை பேசும் சம்பவங்கள் 223 என்ற எண்ணிக்கையிலிருந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கையானது 1,165-ஆக அதிகரித்துள்ளது. இது 74.4 சதவிகிதம் அதிகமாகும் என்று மேற்கண்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வெறுப்புணர்வுப் பேச்சு சம்பவங்களில் 98.5 சதவிகிதம் முஸ்லிம்களை குறிவைத்தே நிகழ்ந்துள்ளன. இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே நிகழ்ந்துள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதிலும் குறிப்பிடும்படியாக, பாஜக தலைவர்களால் 450 வெறுப்புணர்வுப் பேச்சு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும், பிரதமர் மோடி 63 சம்பவங்களில் இத்தகைய வெறுப்புணர்வுக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அத்தகைய சம்பவங்களில், இந்திய நாட்டுக்கும் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்கள் பெரும் அபாயத்தை விளைவிப்பவர்கள் என்று சித்தரித்து பேசப்பட்டுள்ளதாகவும் மேற்கண்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்ட பின், அதே பாணியில், 'முஸ்லிம்களிடமிருந்து வழிபாட்டுத் தலங்களைக் கைப்பற்ற வேண்டும்' என்ற கருத்தை பொதுவெளியில் அதிகளவில் ஹிந்து மத நம்பிக்கையில் மிகத் தீவிரமாக உள்ள சில தலைவர்கள் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...