அமெரிக்கா மற்றும் ஆசியாவில் கடந்த 7 நாட்களில் 5,037 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - உலக சுகாதார அமைப்பு
கொரோனா பாதிப்பானது சிங்கப்பூர், ஹாங் காங், தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் திடீரென அதிகரித்து வருவதாகவும், இந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய கொரோனா பரவலுக்கு ஒமைக்ரானின் திரிபு வகையான ஜே.என். 1, என்பி.1.8.1 மற்றும் எல்எஃப் .7 ஆகியவையே காரணம் என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மட்டுமே கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா, வாஷிங்டன், விர்ஜினியா மற்றும் நியூ யார்க் ஆகிய நகரங்களில் என்பி.1.8.1 மற்றும் எல்எஃப் .7 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா பரவல்
இந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. இதுவரை 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரம், தில்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் காணப்படுகிறது.
நேற்று முன்தினம் மகாராஷ்டிரத்தில் 43 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 209ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஜார்க்கண்ட்டில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
தானே யில் 21 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். மும்பையில் கொரோனா பாதிப்புக்கு 4 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
இவர்களில் பெருபாலானோர் இளைஞர்களே.
Comments
Post a Comment