கொரோனா பரவல்:
பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தொற்று பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தெற்காசிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகின்றது. மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க கூட்டம் கூடும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இத்துடன், சுவாச நோய் அறிகுறி, காய்ச்சல் உள்ளவர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது பாதுகாப்பானது என்றும், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்குமாறும், தடுப்பூசிகளை முறையாகச் செலுத்திக்கொள்ளுமாறும் பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
Comments
Post a Comment