தென்னாங்கூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்டம் நடைபெற்றது முன்னதாக புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு அனைத்து மாணவ மாணவிகளையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் வரவேற்றார்கள் கல்லூரி முதல்வர் சித. ரவிச்சந்திரன் தலைமை உரையாற்றினார், மாணவர் சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவத்தையும், ஒழுக்கம் குறித்தும் குறிப்பிட்டார் விழாவின் தொடக்கமாக முனைவர் நா. மனோகரன் கணினி அறிவியல் துறைத் தலைவர் வரவேற்பு உரையாற்றினார் விழாவின் வாழ்த்துறையாக ரா. சுமதி ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் வ. சந்திரசேகர் கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் இரா. பெரியசாமி கல்லூரி நூலகர் மற்றும் இயற்பியல் துறை தலைவர் (பொ) முனைவர் பா. மோகனவள்ளி உடற்கல்வி இயக்குனர் மற்றும் விலங்கியல் துறை தலைவர் (பொ), முனைவர் ஏ எழில் வசந்தன் தமிழ்த் துறை தலைவர் மற்றும் தா. சுகந்தி உதவி பேராசிரியர் மற்றும் உயிர் வேதியியல் துறை தலைவர் (பொ) வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக செ.தீபக் ரஜினி காவல் துணைக் கண்காணிப்பாளர் வந்தவாசி, கல்லூரி படிப்பு படிக்கும்போது எவ்வாறு சிறப்பாக செயல்படுவது அரசு துறைக்கு எவ்வாறு தயாராவது ,நேர நிர்வாக நடைமுறைப்படுத்துவது , கூடுதலாக பாடத்திட்ட நடவடிக்கைகள், எவ்வாறு தனித்திறமையை மேம்படுத்துவது என்று சிறப்பு உரையாற்றினார். இறுதியாக முனைவர் ர. மணிமுருகன் வணிகவியல் துறைத் தலைவர் அவர்கள் நன்றி உரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் அனைத்து துறை ஆசிரியர்களும், பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment