Skip to main content

நாகை: நாகூர் தர்காவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்! மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தேசிய கொடியேற்றினார்

நாகை: நாகூர் தர்காவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்! மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தேசிய கொடியேற்றினார்

நாகை: நாகூர் தர்காவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்! மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தேசிய கொடியேற்றினார்

நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் தர்காவில் இந்த வருடம் மிகச்சிறப்பான முறையில் 

சுதந்திர தின ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மாண்புமிகு நீதிமன்ற உத்தரவுப்படி நாகூர் தர்காவிற்க்கு புதிய நிர்வாகம் கடந்த ஏப்ரல் முதல் அமைந்துள்ளது. அதன்படி நாகூர் தர்கா நிர்வாகத்தை ஸ்கீம் படி போர்டு ஆப் டிரஸ்டிகள் நிர்வாகித்து வருகின்றனர்.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக திகழும் 465 வருட பாரம்பரியமிக்க நாகூர் தர்கா பெரிய மினராவில் தேசிய கொடி மின்னொளி அமைக்கப்பட்டது. பெரும் வரவேற்பைப் பெற்றது

நேற்று நாகூர் தர்கா அலுவலக முகப்பில் நாகூர் தர்கா அலங்கார வாசலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, முதன் முறையாக சுதந்திர தின விழா அன்னதான நிகழ்வு நடைப்பெற்றது

நாகூர் தர்கா அலங்கார வாசலில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்விற்க்கு தலைமையேற்ற, தர்கா ஆலோசனைக் குழு தலைவர்  செய்யது முஹம்மது கலீபா சாஹிப் வரவேற்புரையாற்றினார்.

நாகூர் ஆண்டகை – குஞ்சாலி மரைக்காயர் – போர்ச்சுக்கல் படை வெற்றி குறித்து பேசினார்,

பின்னர் தர்கா டிரஸ்டி சேக் ஹசன் சாஹிப் அனைவருக்காகவும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் புனித துவா ஓதினார்.

பின் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டு தர்கா மானேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் தேசிய கொடி ஏற்றினார். தேசிய கொடிக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்னர் சிறப்பு விருந்தினர் நாகூர் காவல் ஆய்வாளர் சிவராமன் அன்னதான நிகழ்வினை துவக்கி வைத்து அனைவருக்கும் உணவு வழங்கினார். சுமார் 600 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்திய சுதந்திர தினத்தன்று முதன்முறையாக நாகூர் தர்கா நிர்வாகம் சார்பாக இந்த  அன்னதான நிகழ்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிகழ்வில் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் அபுல் பதஹ் சாஹிப், சுல்தான் கபீர் சாஹிப், ஹாஜா முஹைய்னுதீன் சாஹிப், முஹம்மது பாக்கர் சாஹிப், செய்யது யூசுப் சாஹிப், ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜலீல் சாஹிப், நாகூர் நகர காஜி ஜான் சாஹிப், தர்கா ஆதீனஸ்தர்கள் செய்யது மீரான் சாஹிப், சுல்தான் சாஹிப், தம்பி சாஹிப், சமீர் சாஹிப், அபு சாஹிப், கரிமுல்லா சாஹிப், சாபுனி சாஹிப், சாதிக் சாஹிப், உள்ளிட்ட நாகூர் தர்கா சாஹிப்மார்கள் நாகூர் நவ்சாத், சர்புதீன்,தர்காஅலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Comments