Skip to main content

பெருங்கட்டூர்: ‘தடம்’ நூல் அறிமுக விழா!

பெருங்கட்டூர்: ‘தடம்’ நூல் அறிமுக விழா!

பெருங்கட்டூர்: ‘தடம்’ நூல் அறிமுக விழா!

திருவண்ணாமலை மாவட்டம்செய்யாறு   

அடுத்த பெருங்கட்டூர்  ஊர்புற நூலகத்தில் செய்யாறு வருவாய் ஆய்வாளர் மா. சுந்தரமூர்த்தி அவர்களின் ‘தடம்’ நூல் அறிமுக விழா நடைபெற்றது.

இந் நிகழ்வில் அரிமா சங்க மாவட்ட தலைவர் ம. சிவானந்தம் தலைமை வகித்தார்.

நூலகர் ஜா.தமீம் அனைவரையும் வரவேற்றார்.

அரிமா சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல், காளத்தி குமரன் அரிமா சங்க வட்டாரத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் விருது பெற்ற வெம்பாக்கம் ப. ஜீவகாருண்யன் ‘தடம்’ நூல் அறிமுகம் செய்து அறிமுக உரை நிகழ்த்தினார்.

இந்த நூல் வரலாற்று நூலாகும் அனைத்தும் சேர்ந்த ஒரு தொகுப்பு நூலாக விளங்குகிறது என்றார் பல்வேறு தலைப்புகளில் நூலாக்கம் செய்துள்ளார் என்றார்.

‘தடம்’ நூல் குறித்து ஏற்புரை வழங்கிய மா. சுந்தரமூர்த்தி அவர்கள் இது என்னுடைய முதல் நூல் என்றார் அடுத்ததாக கவிதை நூல் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

என்னுடைய இந்த நூல் அனைத்தும் சேர்ந்த தொகுப்பு நூலாக விளங்குகிறது என்றார்.

அசனமா பேட்டை அக்னி சிறகுகள் அரிமா சங்கத் தலைவர் தில்லை கார்த்தி, பெருங்கட்டூர் வருவாய் ஆய்வாளர் கி. அருள் ஆகியோர் தலா ரூபாய் ஆயிரம் நூலகரிடம் செலுத்தி புரவலர்கள் ஆக இணைந்தனர்.

நூலக புரவலர் கோ. குமரன் உள்ளிட்ட  வாசகர்கள் கலந்து கொண்டனர்

இந் நிகழ்வை நூலகர் ஜா. தமீம் ஒருங்கிணைத்தார்.

Comments