Skip to main content

உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய 17 வயது இளைஞரின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்! 3 ஆண்டு சிறை தண்டனை!

திருவண்ணாமலை மாவட்டம் 
 வந்தவாசி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வந்தவாசி 5 கண் பாலத்தின் அருகில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஆணையின் பேரில் வந்தவாசி உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வந்தவாசி வட்ட ஆய்வாளர் அறிவுரைப்படி காவல் உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது வெற்றி பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் வாகன உரிமம் இல்லாமல் வாகனத்தை  ஓட்டி வந்தவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் சிறுவனுக்கு 17 வயது என தெரிய வந்ததால் அவரின் தந்தை மேகேந்திர குமார் வ/50 த/பெ டீகாராம், தலையாரி தெரு, கீழ் சாத்தமங்கலம் கிராமம் என்பவர் மீது வந்தவாசி தெற்கு காவல் நிலைய குற்ற எண்: 178/22 U/s 199(A),180 MV ACT மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனையாக ரூபாய் 25000 மற்றும் மூன்றாண்டு சிறை தண்டனை கிடைக்கும் என காவல்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

– எல்லப்பன்

Comments