செய்யாறு: நகர அதிமுக அலுவலகம் திறப்பு! மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் திறந்து வைத்தார்


திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு நகர அதிமுக அலுவலகத்தை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ திறந்துவைத்தார்
நகர கழக செயலாளர் கே வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில், அவைத்தலைவர் ஜனார்த்தனம் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலை வகித்தனர்
தொடர்ந்து நகர அதிமுக புதிய அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதிமுக மூத்த முன்னோடிகள் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்
செய்யார் நகரம் 6-வது வார்டு
செல்வ விநாயகர் கோயில் தெருவில் அதிமுக கொடியேற்றி அன்னதானம் இனிப்புகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் சி துரை அருகாவூர் அரங்கநாதன் குணசீலன் மு எம்எல்ஏ திருமூலன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் உக்கல் பி லட்சுமி அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் பூக்கடை கோபால் வெம்பாக்கம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெ சிவா தூசி கன்னியப்பன் செய்யாறு சர்க்கரை ஆலை தலைவர் குமரேசன்
உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள்
பிற அணி பொறுப்பாளர்கள், கூட்டுறவு உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர்
Comments
Post a Comment