அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து மழை!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம்,சூடுபிடித்து தணியும் நிலையில், வரும் 27 ந்தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது இரண்டு மூன்று தினங்களே பாக்கியுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் முன்னாள் முதல்வரும், கழக பொதுச்செயலாளரும் எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமிக்கு ஆதரவான வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது
இடைத் தேர்தலில் கிடைக்கும் வெற்றியை விட அதிமுக வினருக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிகம் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது எனக் கூறலாம் தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சி யை வெளிப்படுத்தி வருகின்றனர்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் முன்னாள் எம்எல்ஏ,ஆலோசனையின் பேரில், செய்யாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில், வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த திலிருந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் ஐநூறு பேருக்கு அன்னதானம் வழங்கி அமர்க்களப்படுத்திவிட்டனர்
தொடர்ந்து ஆரணி முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி யை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கு பூங்கொத்துவழங்கிவாழ்த்துக்களை கூறி வாழ்த்துக்களை பெற்றார் அனக்காவூர் ஒன்றிய கழக செயலாளர் சி துரை
Comments
Post a Comment