கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தாய்மொழி தின விழா!

கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தாய்மொழி தின விழா!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தாய்மொழி தினவிழா சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை தாங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் க. ஜோதி பாபு, துணைத் தலைவர் எ. தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்ச் சங்க துணைத் தலைவர் பா. சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற முதுகலை தமிழாசிரியை புலவர் அ. ராஜகுமாரி பங்கேற்று, தாய்மொழியாம் தமிழ் மொழி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் துணைச் செயலாளர் தமிழ்ராசா, செயற்குழு உறுப்பினர் அ. ரஷுத்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பல்வேறு போட்டிகளில பங்கேற்ற மாணவர்களுக்கும், திருவள்ளுவர் மற்றும் ஔவையார் உள்ளிட்ட மாறுவேட போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி ஆசிரியர்கள் சாந்தி, விஜயகாந்த், செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறுதியில் பள்ளி பட்டதாரி ஆசிரியை மு. சத்யபாமா நன்றி கூறினார்.

Comments