இந்தியாவில் புதிதாக 7533 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 44 பேர் பலி
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,533 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறிந்துள்ள நிலையில், 24 மணிநேரத்தில் 44 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 10,000 க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்து வந்தது.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீரானதாக இல்லை. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000-த்தை தாண்டியதாக இருந்தது.
ஆனால் கடந்த 24 மணிநேரத்திலான ஒருநாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,533 ஆக பதிவாகி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 53,852 ஆகவும், இதுவரை நாட்டில் 4,49,32,344 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
44 பேர் பலி
அதே நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 44 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதில் கேரளாவில் மட்டும் 17 பேரும், டெல்லியில் 7 பேரும், சத்தீஸ்கர், மகாராஷ்டிராவில் தலா 3 பேரும், ராஜஸ்தான், அரியானா, மத்திய பிரதேசத்தில் தலா 2 பேரும், தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார், அரியானா, ஒடிசா, உத்தரகாண்ட், கர்நாடகாவில் தலா ஒருவர் என ஒரேநாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் மொத்தம் 5,31,468 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment