அனக்காவூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்!

அனக்காவூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்!

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா கூழமந்தல்  கிராமத்தில் நடைபெற்றது

ஒன்றிய கழக செயலாளர் சி.துரை தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு.எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு, கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இளநீர் மோர் தர்பூசணி வெள்ளரி உள்ளிட்ட பழ வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்

உடன் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு ஒன்றிய கழக செயலாளர் அருகாவூர் அரங்கநாதன் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஏ வி சேகர் தனசேகர் குன்னவாக்கம் சுதாகரன் தூசி கன்னியப்பன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் கூழமந்தல் கிளை கழக செயலாளர் பாலாஜி செய்திருந்தனர்

Comments