வந்தவாசி: மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
வந்தவாசி: மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கு ஒன்றியத் தலைவர் என்.நவநீதி தலைமையில் நடைபெற்றது
நகர தலைவர் ஆர்.சுரேஷ் வரவேற்புரையாற்ற, முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் துரை நாடார் மாவட்ட செயலாளர் குருலிங்கம் முன்னிலை வகித்தனர்
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பி.பாஸ்கரன் மாவட்ட பொதுச்செயலாளர் பி.முத்துசாமி சிறப்புரையாற்றினார்கள்
தமிழகத்தில் அனைத்து மகளிர்களுக்கும் ரூ.1000 தருவதாக கூறிவிட்டு தற்போது பெரும்பாலானோருக்கு உரிமைத் தொகை கிடைக்காமல் செய்தது திமுக அரசு.
ஊரெங்கும் பெருக்கெடுத்தோடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை அப்பாவி மக்களை நடுத் தெருவில் நிற்க வைக்கும் ஒரு நம்பர் லாட்டரி.
தக்காளி முதல் வெங்காயம் வரை,பருப்பு முதல் அரிசி வரை விலை வாசி உயர்வு இதை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
Comments
Post a Comment