வந்தவாசி: மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை கடும் நடவடிக்கைக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரணி!
வந்தவாசி: மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை கடும் நடவடிக்கைக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரணி!
மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் கலவரம், வன்முறைகளை உடனடியாக தடுத்த நிறுத்தவும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வந்தவாசி வட்டக்குழு சார்பாக, வட்டார செயலாளர் அப்துல்காதர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்
வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி பஜார் வழியாக சென்று தேரடி அஞ்சலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரா.சரவணன் கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் இடைக்குழு உறுப்பினர்கள் யாசர் அராபத், மோகன், நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் அரிதாசு, ராமகிருஷ்ணன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் சுகுமார் கலந்துகொண்டனர். இறுதியாக ரா.சேட்டு நன்றியுரை ஆற்றினார்.
Comments
Post a Comment