வந்தவாசி: பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் மருத்துவ அலுவலர் காளிசெல்வம் வழங்கினார்

வந்தவாசி: பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் மருத்துவ அலுவலர் காளிசெல்வம் வழங்கினார் 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதையொட்டி நடைபெற்ற  பரிசோதனையில் ஒருசில குறைபாடுகள் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச கண்ணாடிகளை முதன்மை மருத்துவ அலுவலர் காளிச்செல்வம் வழங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியை பொ. பத்மாவதி தலைமை தாங்கினார்.

இந் நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் வினோத், எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், எக்ஸ்னோரா கிளை இயக்குநர் வெங்கடேசன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் ஆகியோர் பங்கேற்று மாணவிகளுக்கு உடல் நலம் சார்ந்த கருத்துக்களை வழங்கினர்.

பள்ளி உடற்கல்வி ஆசிரியை மின்னிலா நன்றி கூறினார்.

Comments