செய்யாறு: பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் டாக்டர் ஏ. பி.ஜெ. அப்துல் கலாம் நினைவு தினம்!

செய்யாறு: பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் டாக்டர் ஏ. பி.ஜெ. அப்துல் கலாம் நினைவு தினம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் மரக்கன்றுகள் நடுதல், மற்றும் வழங்கும் நிகழ்வு,  ஊராட்சி மன்ற தலைவர் அ. சரவணன் தலைமையில் நடைபெற்றது.

நூலக புரவலர் பா. குப்புராஜ் அரிமா சங்க உறுப்பினர் பூ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக அரிமா சங்க மாவட்ட தலைவர் மா. சிவானந்தம் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.

அரிமா சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல் அவர்கள் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

இந்த நிகழ்வில் நூலக வாசகர்கள் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை நூலகர் ஜா. தமீம் செய்திருந்தார்.

Comments