செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20 மதுரை பொன் விழா மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்!

செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20 மதுரை பொன் விழா மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், ஆகஸ்ட் 20 மதுரை பொன் விழா மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது

இந் நிகழ்வில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில  துணைச்செயலாளர் பி.ஜாகீர் உசேன்  வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்

சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு.எம்எல்ஏ முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர்

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் செய்திருந்தார் அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது

இந் நிகழ்ச்சியை தொடர்ந்து பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான பிரச்சார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது

வாகனத்திற்கு முன்னும் பின்னும் அதிமுக வினர் "விடியா திமுக அரசை அகற்றுவோம் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைப்போம்" என கோஷமிட்டபடி சென்றனர்


 

Comments