செய்யாறு: நகர திமுக இளைஞரணி சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா 500 பேருக்கு அன்னதானம்!
செய்யாறு: நகர திமுக இளைஞரணி சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா 500 பேருக்கு அன்னதானம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் நகர திமுக இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அறிஞா் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்ற இந் நிகழ்வுக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
இந் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நகரமன்றத் தலைவா் மோகனவேல், நகர கழக செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன், ஒன்றிய திமுக செயலாளர்கள் ஞானவேல், ஜே.சி.கே.சீனுவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
இதேபோல் வந்தவாசி நகரில் நடைபெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்வு நகர கழக செயலாளர் தயாளன் தலைமையில், நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்எல்ஏ க்கள் அம்பேத்குமார் ஓ.ஜோதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் முன்னதாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக திமுக வினர் தேரடி,பழைய பஸ் நிலையம் எதிரில் பட்டாசுகள் கொளுத்தினர்
இதில் நகர மன்றத்தலைவர் எச் ஜலால் துணைத் தலைவர் அன்னை க.சீனு நகர அவைத்தலைவர் நவாப்ஜான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment