விவசாயத்தைக் காப்பது கொள்கை முடிவு! விளைநிலங்கள் அழிக்கப்படுவதை பா.ம.க அனுமதிக்காது - அன்புமணி ராமதாஸ்
விவசாயத்தைக் காப்பது கொள்கை முடிவு! விளைநிலங்கள் அழிக்கப்படுவதை பா.ம.க அனுமதிக்காது - அன்புமணி ராமதாஸ்
விவசாயத்தைக் காப்பது பாமகவின் கொள்கை முடிவு. விளைநிலங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த மேல்மா பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி பாமக சாா்பில் நேற்று கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கொட்டும் மழையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
"தமிழகத்தில் கடந்த 45 ஆண்டுகளில் விவசாய நிலப் பரப்பு 48 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாகக் குறைந்துள்ளது. 42 லட்சம் ஏக்கா் விளைநிலம் அழிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செங்கம், போளூா் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தரிசு நிலங்கள் உள்ளன. அங்கு சிப்காட் தொடங்கலாம். அதைவிடுத்து, முப்போகம் விளையும் மண்ணை அழிப்பதை ஒருபோதும் பாமக அனுமதிக்காது.
விவசாயத்தைக் காப்பது பாமகவின் கொள்கை முடிவு. விவசாயத்தை அழித்து எந்த முன்னேற்றமும் நமக்கு வேண்டாம்.
10 ஆயிரம் ஏக்கா் பரப்பிலான விளைநிலங்களைக் கையகப்படுத்தும் திட்டமான 8 வழிச் சாலைத் திட்டத்தை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் அறிவுசாா் நகரம் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு 1700 ஏக்கா் பரப்பிலான விளைநிலம் பாதிக்கப்படுகிறது. விளைநிலங்கள் அழிக்கப்படுவதை எதிா்த்து போராட்டம் நடத்தினால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கைது செய்யப்படுகின்றனா். மண்ணைக் காப்பாற்ற போராடியவா்கள் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்படும் பாமகவுக்கு வாய்ப்பளித்தால், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்போம்.
திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்ததற்கு மாறாக, சிப்காட் திட்டத்துக்காக தரிசு நிலங்களை விடுத்து, விளைநிலங்களைக் கையகப்படுத்துகிறது. இதை பாமக கடுமையாக எதிா்க்கும்.
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து, அவா்களை விடுவிக்க வேண்டும். அருள் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து அவரை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றாா்
சிப்காட் விவகாரம் தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி நேற்று பிணையில் விடுவிக்கப்பட்ட மேல்மா விவசாயிகளில் 6 பேருக்கு அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மாவட்ட பா.ம.க செயலாளர் அ.கணேஷ்குமார் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
மாநில உழவா் பேரியக்கத் தலைவா் ஆலயமணி, செயலாளர் வேலுசாமி, பாட்டாளி தொழிற்சங்க மாநிலத் தலைவா் ராம முத்துக்குமாா், பாமக மாவட்டத் தலைவா் தி. கா. சீனிவாசன், மாநில இளைஞரணிச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment