செய்யாறு: திருவத்திபுரம் நகராட்சியில் 2 - ம் கட்ட "மக்களுடன் முதல்வர் "முகாம்!

செய்யாறு: திருவத்திபுரம்  நகராட்சியில் 2 - ம் கட்ட "மக்களுடன் முதல்வர் "முகாம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் 2-ஆம் கட்டமாக 7,10,14,15 ஆகிய வாா்டுகளுக்கு நடைபெற்ற " மக்களுடன் முதல்வர்" முகாமுக்கு, திருவத்திபுரம் நகரமன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை தாங்கினார்

செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்  ஒ.ஜோதி, கோட்டாட்சியர் பல்லவி வா்மா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆணையா் (பொ) கே.பி.குமரன் வரவேற்றாா். இதில், பொதுமக்கள் அளித்த 383 மனுக்களில் 9 மனுக்கள் உடனடியாக தீா்வு காணப்பட்டது.

இந் நிகழ்வில், சிறப்பு விருந்தினா்களாக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், செய்யாறு சர்க்கரை ஆலை இயக்குனருமான,  எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் பங்கேற்று 9 பேருக்கு சான்றிதழ் வழங்கினா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷிணி, கூடுதல் ஆட்சியா் ரிஷப், வட்டாட்சியா் முரளி, நகரமன்ற துணைத் தலைவா் பேபி ராணி பாபு, ஒன்றியக்குழுத் தலைவா்கள் திலகவதி ராஜ்குமாா்(அனக்காவூா்), த.ராஜி (வெம்பாக்கம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Comments