Skip to main content

பிரஸ், காவல், வக்கீல் போன்ற ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டக்கூடாது: மீறினால் 2 ம் தேதி முதல் ரூ.500 அபராதம், போலீஸ் எச்சரிக்கை!

பிரஸ், காவல், வக்கீல் போன்ற ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டக்கூடாது: மீறினால் 2 ம் தேதி முதல் ரூ.500 அபராதம், போலீஸ் எச்சரிக்கை

சென்னை: அரசால் அங்கீகரிக்கப்படாத, பிரஸ், காவல், டாக்டர், வக்கீல், மின்வாரியம் போன்ற ஸ்டிக்கர்கள் தனியார் வாகனங்களில் ஒட்டக்கூடாது என்றும், மீறி வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் வரும் 2ம் தேதி முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தனியார் வாகனங்களின் வாகன எண் தகட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள், குறிகள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனி நபர்களுக்கு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் பரவலான எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தலாம். பெரும்பாலும், சென்னை பெருநகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி (மின்வாரியம்), ஜிசிசி (சென்னை மாநகராட்சி), காவல் துறை உள்பட முப்படை போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்களை காணலாம்.

இதுபோன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் காணப்படும். இத்தகைய அரசாங்க தொடர்புடைய சின்னங்கள், எழுத்துகளை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது. கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள், இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.

இதுதவிர, பல தனியார் வாகனங்களில் ஒரு சில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வக்கீல் என வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உண்மையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை இந்த நடைமுறைகளுக்கு எதிராக சாலையைப் பயன்படுத்துபவர்களை எச்சரித்தும், முரண்பாட்டினை தங்களது வாகனத்தில் சரிசெய்ய வரும் 1ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

மேலும் விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் 2ம் தேதி முதல், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறியீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகன விதி 50 u/s 177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை பெருநகர காவல் எல்லையில் நேற்று முதல் போக்குவரத்து போலீசார் பைக் மற்றும் கார்களில் அசரால் அங்கீகரிக்கப்படாத பிரஸ், காவல், டாக்டர், வக்கீல், சென்னை மாநகராட்சி, மின்வாரியம் போன்ற அரசு துறை சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்ட கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும், தனியார் வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த டாக்டர், வக்கீல், பிரஸ், காவல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை கிழித்தனர்.

அப்போது வாகன ஓட்டிகளிடம் வரும் 2ம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டி இருந்ததால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி ரூ.500 அபராதம் விதிதக்கப்படும். முதல் முறை எச்சரிக்கையை மீறி வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகன ஓட்டிகள் அகற்றவில்லை என்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என அங்கீகாரமற்ற வகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டுப்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 198 மற்றும் மத்திய மோட்டார் வாகன சட்டம் விதி 50-ன் கீழ் வரும் மே 2-ம் தேதி முதல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளன.

வாகனங்களில் 'டாக்டர்' ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதி அளிக்க கோரி, சென்னை காவல் ஆணையருக்கு ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: மருத்துவர்கள் பணி மனித உயிரை காப்பாற்றும் ஒரு இன்றியமையாத பணி ஆகும். அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் மருத்துவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரிப்பதால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும்.

இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சந்தேகப்படும் மருத்துவர்களை ஐடி கார்டை காட்ட சொல்லலாம். அனைத்து மருத்துவர்களையும் டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்பது மருத்துவர்களை அவமரியாதை செய்வதாகவும், உயிர் காக்கும் உன்னத பணியை தடுப்பதாகவும், மக்கள் உயிருடன் விளையாடுவதாகவும் மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

அதனால், அந்த சுற்றறிக்கையை உடனடியாக திருத்தம் செய்து, டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விலக்களித்து, புதிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர். கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் எஸ்.அறிவழகன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அதில் கூறியிருப்பதாவது: வழக்கறிஞர் என்ற வாகன பதிவு எண் கொண்ட ஹோலோகிராம் ஸ்டிக்கரை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் விநியோகம் செய்கிறது.

உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற வளாகங்களுக்குள் வழக்கறிஞர்கள் தங்கு தடையின்றி வந்து செல்லவும், வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் வெளிநபர்கள் தவறாக சட்டவிரோதமாக செயல்படுவதை தடுக்கும் வகையிலும், பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களை வேறுபடுத்திக் காட்டவுமே அங்கீகாரம் பெற்ற வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் இந்த ஸ்டிக்கர்களை வழங்குகிறது.

மத்திய மோட்டார் வாகன சட்ட விதி 50-ன் படி குறைபாடு உடைய நம்பர் பிளேட் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். கண்ணாடிகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அந்த விதிகள் தடையாக இல்லை.

எனவே பார் கவுன்சிலில் பதிவு செய்யப்படும் வழக்கறிஞர்கள் தங்களது வாகனங்களில் பார் கவுன்சில் வழங்கும் ஸ்டிக்கரை பயன்படுத்திக்கொள்ள எந்த தடையும் இல்லை என போலீஸார் அறிவிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...