Skip to main content

விரைவில் 4 மாநில தேர்தல்..! தேசிய அரசியலில் மாற்றம்.!- சோனியா காந்தி

விரைவில் 4 மாநில தேர்தல்..! தேசிய அரசியலில் மாற்றம்.!
- சோனியா காந்தி

"மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் விரைவில் நடைபெறவுள்ள நான்கு மாநில சட்டசபை தேர்தலில் செயல்பட்டால், தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும்" என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், பேசிய அவர், "வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என்றும் பல முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக கோடிக்கணக்கான குடும்பங்கள் அவதிப்படும் நிலையில், மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது என்று அவர் வேதனை தெரிவித்தார். 

மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து மோடி அரசு சரியான பாடம் கற்கும் என நினைத்தோம், மாறாக, சமூகங்களை பிரித்து அச்சம் மற்றும் விரோத போக்கு கொள்கையை தொடர்ந்து பின்பற்றுகின்றனர் என்றார் அவர்

ஜம்முவில் மட்டும் கடந்த சில வாரங்களில் 11 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் பாதுகாப்பு படை வீரர்கள், அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் சோனியா குறிப்பிட்டார்.

உலகின் பல நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் சென்று, இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த மறுக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இன்னும் சில மாதங்களில் நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது என்றும் மக்களவை தேர்தலில் நமக்காக ஏற்படுத்தப்பட்ட வேகத்தையும் , நல்லெண்ணத்தையும் தக்க வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டால், தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

மேலும் மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டால், தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...