வக்பு சட்டத்திருத்த மசோதா 2024 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கருத்தரங்கம்!
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வக்பு சட்டத்திருத்த மசோதா-2024 ஆலோசனைகளும் ஆட்சேபனைகளும் மாபெரும் கருத்தரங்கம் இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு சங்கைக்குரிய உலமா பெருமக்கள், மஹல்லா ஜமாஅத் முத்தவல்லிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள். மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்புரை ஆற்றுகிறார். கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும் தேசிய பொதுச்செயலாளருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி துவக்க உரையாற்றுகிறார்.
ஒன்றிய சிறுபான்மை நலத்துறை முன்னாள் அமைச்சரும் ராஜ்ய சபா முன்னாள் துணைத்தலைவருமான கே.ரஹ்மான்கான், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் திமுக பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற கட்சித் தலைவருமான இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயினுத்தீன், தேசிய துணைத் தலைவர் முனைவர் அப்துஸ் ஸமது ஸமதானி எம்.பி., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம். அப்துல்லாஹ் எம்.பி., லாயர்ஸ் போரம் தேசிய தலைவர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் எம்.பி., மாநில முதன்மை துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான்(முன்னாள் எம்.பி.), தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி எம்.பி., தேசிய செயலாளர் ஹெச்.அப்துல் பாசித் (முன்னாள் எம்.எல்.ஏ.) மகளிர் லீக் தேசிய தலைவர் எஸ். பாத்திமா முஸப்பர் எம்.சி. ஆகியோர் கருத்துரை வழங்குகிறார்கள். மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் நன்றியுரை ஆற்றுகிறார்.
Comments
Post a Comment