வந்தவாசி: நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!

வந்தவாசி: நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நாட்டு நலப் பணி திட்ட முகாம் இளங்காடு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் இன்று பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தை வந்தவாசி ரெட் கிராஸ் சங்க செயலாளர்
பா. சீனிவாசன் தொடங்கி வைத்தார். 

திட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் சீ. கேசவ ராஜ், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் ஆகியோர் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு தகவல்களை பகிர்ந்தனர்.

மேலும் என்எஸ்எஸ் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு  வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு  முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இறுதியில் பட்டதாரி ஆசிரியர் கோதண்டராமன் நன்றி கூறினார்.

Comments