தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வந்தவாசி கோட்டம் சார்பில்,தேசிய மின் சிக்கன வாரம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் தேசிய மின் சிக்கன வாரம் கொண்டாடப்பட்டது வந்தவாசி கோட்டம் சார்பில்,இன்று மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
வந்தவாசி செயற்பொறியாளர் வே.சரவண தங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, வந்தவாசி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் முன்னிலை வகித்தார்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் நகர மன்றத் தலைவர் எச்.ஜலால் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்
உடன் உதவி செயற்பொறியாளர்கள் தி.நாராயணன்,ரா.ஜெகன்நாதன்,சு.சசிகுமார் மற்றும் உதவி பொறியாளர்கள்,மின் வாரிய ஊழியர்கள்,எ.எ.பி.நர்சிங் கல்லூரி மாணவ,மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர். மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்தும் பதாகைகள் ஏந்தியும், கோஷமிட்டும் பேரணியில் சென்றனர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர் பேரணி கோட்டை மூலையில் புறப்பட்டு பழைய பேருந்து நிலையம்,பஜார் வீதி,தேரடி வழியாக புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது உதவி மின் பொறியாளர் பஞ்சமூர்த்தி நன்றியுரை ஆற்றினார்
Comments
Post a Comment