தேர்தல் முறைகேடு ராகுல் காந்தி குற்றச்சாட்டு! மாயமாக மறைந்த 5 மாநில வாக்காளர் பட்டியல்

தேர்தல் முறைகேடு ராகுல் காந்தி குற்றச்சாட்டு! மாயமாக மறைந்த 5 மாநில வாக்காளர் பட்டியல்

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் என்று நேற்று ஆதாரத்துடன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்திய நிலையில் மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் பக்கங்கள் தேர்தல் ஆணைய இணையதளங்களிலிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளன.காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இது தொடர்பாக வாக்காளர் பட்டியலில் போட்டோக்களையும் வெளியிட்ட ராகுல் காந்தி, ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் சாடியுள்ளார்.

தேர்தல் ஆணைய முறைகேடு - ராகுல் காந்தி

அவர் தனது புகாரில், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்? வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்? வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்? எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்? பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்?

ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக மாறும், அப்போது நீங்கள் தப்ப முடியாது.

இந்தியாவின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துள்ளீர்கள், இனி உங்களை தொட விடமாட்டோம். தேர்தல் ஆணையம் முழு விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார். உயர் பதவியில் இருந்தாலும் சரி கடைநிலையில் பணியாற்றினாலும் சரி.

போலி முகவரிகள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று இல்லாத முகவரியில் இருப்போர்.. நீங்கள் அங்குத் தேடிச் சென்றால் அதுபோல எந்தவொரு முகவரியும் இருக்காது இருக்காது. மற்றொன்று, வீடு எண் 0, தெரு எண் 0 போன்ற செல்லாத முகவரிகள். இறுதியாக, உறுதிப்படுத்த முடியாத முகவரிகள் இருக்கும். இத்தகைய போலி முகவரிகள் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 40,000 க்கும் மேல் இருக்கிறது

நான் காட்டியவை எங்களுடைய தரவுகள் அல்ல, தேர்தல் ஆணையத்தின் தரவுகள். சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த தரவுகளை அவர்கள் மறுக்காமல், என்னிடம் உறுதிமொழி கேட்கின்றனர். தவறு என்றால் தவறு என சொல்ல வேண்டியதுதானே. அவர்களுக்கு ஏனென்றால் உண்மை தெரியும், நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்,

அடுத்து ஒரு வீட்டில்.. ஒரே படுக்கையைக் கொண்ட வீட்டில் 80 பேர் இருக்கிறார்கள். நேரில் சென்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. அதேபோல இங்கு பூத் எண் 366 ல் உள்ள 46 வாக்காளர்கள் அனைவரும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவருமே ஒரே ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் வசிப்பதாக இதில் இருக்கிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் என்று நேற்று ஆதாரத்துடன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அம்பலப்படுத்திய நிலையில் மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் தேர்தல் ஆணைய இணையதளங்களிலிருந்து வாக்காளர் பட்டியல் பக்கங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. அதாவது அந்த பக்கங்களில் இருந்து வாக்காளர்கள் பெயர்களை எடுக்க முடியாத வண்ணம் இந்த பக்கங்கள் முடக்கப்பட்டு உள்ளன.


Comments