வந்தவாசியில் நாதமுனி சபை சார்பில் ஸ்ரீ வைணவ மாநாடு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி
ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் நாதமுனி வைணவ சபையின் சார்பில் 42 ஆம்
ஸ்ரீ வைணவ மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வைணவ சபை தலைவர் கு.மணிவண்ணன் இராமாநுஜதாசர் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார், மு. நிர்மல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து கருடக் கொடியை ஏற்றினர். செயலாளர் ஆர்.சீனிவாச பெருமாள் ராமானுஜதாசர் வரவேற்றார்.
தென்திருப்பேரை உ.வே. அரவிந்த லோசனன் ஸ்வாமிகள் பங்கேற்று 'திருவேங்கடவன் திருவருள்' என்ற தலைப்பில் உபன்யாசம் செய்தார். மேலும் இராம.ஆண்டாள் இராமானுஜதாஸ்யை 'கண்ணன் கழலினை' என்ற தலைப்பில் உபன்யாசம் செய்தார். செல்வி.நரசிம்ம பிரியா 'கோசலை நாடுடை வள்ளல்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இறுதியில் மதுராந்தகம் உ.வே. ரகுவீர பட்டாச்சாரியார் பங்கேற்று 'அந்த நாள் ஞாபகம் வந்ததே' என்ற தலைப்பில் உபன்யாசம் செய்தார். மாம்பட்டு பெ.பார்த்திபன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக 50 க்கும் மேற்பட்ட பஜனைகோஷ்டிகள் கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஶ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலை அடைந்தனர். இந்த மாநாட்டில் சுமார் 750 க்கும் மேற்பட்ட பாகவதர்கள் பங்கேற்றனர். பொருளாளர் முத்து ராமானுஜதாசர் நன்றி கூறினார்.
Comments
Post a Comment