திருவண்ணாமலை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சிமிகு வரவேற்பு!

திருவண்ணாமலை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சிமிகு  வரவேற்பு!

"மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் முன்னெடுத்து செல்லும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்தார்.ஆரணி,செய்யாறு,வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகைத் தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட கழக செயலாளர்கள் தூசி கே.மோகன், ஜெயசுதா லட்சுமிகாந்தன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர் ஆயிரக்கணக்கான மக்களின் எழுச்சிமிகு வரவேற்ப்பை இந்த பகுதிகளில் காண முடிந்தது இதைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு  சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை கூறி வாழ்த்துக்களை பெற்றார் வி.பன்னீர்செல்வம்.

 

Comments