பெண் கல்வி பாதுகாப்பு,போக்சோ விழிப்புணர்வு கருத்தரங்கம்...!

பெண் கல்வி பாதுகாப்பு,போக்சோ விழிப்புணர்வு கருத்தரங்கம்...!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூர் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் கருத்தரங்கம் மற்றும் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியை எம்.நாகலட்சுமி (பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது.ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன், கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ.கேசவராஜ்,எஸ்.எம்.சி தலைவர் சங்கீதா ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி ஆசிரியை தமிழ் இலக்கியா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.மங்கையர்க்கரசி பங்கேற்று, பெண் கல்வியும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் பேசினார். மேலும் போக்சோ விழிப்புணர்வு தகவல்களை உதவி ஆய்வாளர் சாந்தி வழங்கினார். செல்போன் தாக்கத்தால் மாணவிகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவதாக குறிப்பிட்டார். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி ஆசிரியை ஜெயபாரதி நன்றி  கூறினார். கெளசல்யா உள்ளிட்ட ஆசிரியைகள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Comments