வந்தவாசி - வெண்குன்ற தவளகிரீஸ்வரர் மலைக்கோவிலில் அரோகரா கோஷத்துடன் மகாதீபம்...!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெண்குன்றம் கிராமத்தில் சுமார் 1400 அடி உயரமுள்ள மலையில் தவளகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த மலை மீது தவளகிரிஸ்வரர் கோவிலும், அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் கோயில்களும் அமையப் பெற்றுள்ளது.
இந்த மலை மீது நேற்று திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலைக் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. வந்தவாசி அரசு நிர்வாகம் சார்பில் மலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் மட்டுமே மலை மீது ஏறி மகா தீபத்தை ஏற்றினர்.
மேலும் மகா தீபம் காண வந்த பக்தர்கள் மலை அடிவாரத்தில் மகாதீபம் ஏற்றப்பட்ட உடன் அரோகரா கோஷத்துடன் வழிபாடு நடத்தினர். மேலும் காலை முதலே மலைக் கோவில் அடிவாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அனுமதி பெற்ற தன்னார்வ அமைப்புகள் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் எக்ஸ்னோரா கிளை சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டாட்சியர் எஸ்.சம்பத் குமார் தலைமையில் காவல்துறையினர், மருத்துவ துறையினர், தீயணைப்பு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் ஒன்றிணைந்து பணியாற்றினர்.
Comments
Post a Comment